ஹோட்டல் வாடகையைக் கட்டாத பூஜா மீது புகார்

தங்கள் ஹோட்டலில் தங்கி யிருந்த பூஜா காந்தி  வாடகைப் பணம் ரூ.4.5 லட்சத்தைக் கட்டாமல் கம்பி நீட்டிவிட்டதாக போலிசில் புகார் அளித்தனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். 
இதையடுத்து காவல்துறை யினர் பூஜா காந்தியை நேரில் அழைத்து விசாரித்த நிலை யில், ரூ.2 லட்சத்தை செலுத் திய அவர் மீதி பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடி கையாக இருக்கும் பூஜா ஹோட்டல் கட்டணத்தைக் கட்டாமல் ஓடியது பட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 
தமிழில் ‘கொக்கி’, ‘வைத் தீஸ்வரன்’, ‘திருவண்ணா மலை’ படங்களில் நடித்த பூஜாகாந்தி, கன்னடப் பட உல கின் முன்னணி நடிகையா வார். இவர் இந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சில நாட்க ளாகத் தங்கியிருந்த  பூஜா காந்தி வாடகைக் கட்டணத்தை செலுத்தவில்லை.
ஹோட்டல் நிர்வாகத்தினர் பணத்தைத் தரும்படி நெருக் கடி கொடுத்து வந்த நிலையில் ஹோட்டலில் இருந்து பெட்டி, படுக்கையோடு யாருக்கும் தெரியாமல் பூஜா காந்தி வெளியேறிவிட்டார். இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலிசில் புகார் அளித்தனர்.