‘ஜோதிகா, சமந்தாவே  எனது முன்மாதிரி’ 

“திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாயோ அதேபோல் திரு மணத்துக்குப் பின்பும் இருக்க லாம். இதில் எந்த ஒரு மாற்றமும் வேண்டாம். நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும் உன் விருப்பம்,” என்று கணவர் ஆர்யா கூறிவிட்டார். எனவே நான் தொடர்ந்து நடிக்க உள்ளேன்.  இவ்விஷயத்தில் எனக்கு நடிகை சமந்தா, ஜோதி காவே  முன்னுதாரணம் என்று சாயிஷா சைகல்  தெரிவித்துள்ளார்.
‘வனமகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வர் சாயிஷா. இவர் இந்தி நடிகர் திலீப்குமாரின் பேத்தி ஆவார்.
ஆர்யா, சாயிஷா காதல் திரு மணத்தில் முடிந்துள்ள நிலையில் “ஆர்யாவை கரம் பிடித்ததில் மகிழ்ச்சி. எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து நடிப்பதற்கு ஆர்யா எனக்கு முழு உரிமை கொடுத்துள் ளார். எனவே தொடர்ந்து நடிப்பேன்.