சுடச் சுடச் செய்திகள்

வில்லனாகும் விஜய் சேதுபதி

குறுகிய காலத்துக்குள் பல படங்களிலும் நடித்து மக்களிடையே புகழ்பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு இப்போது தமிழ்ப் படங்களில் மட்டுமின்றி தெலுங்குப் படங்களிலும் வாய்ப்புகள் குவிவதாகக் கூறப்படுகிறது.  
தமிழில் கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் அதிரடி நடிப்பில் அசத்தி வரும் விஜய் சேதுபதி, இப்போது தெலுங் கிலும் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். 
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, ‘சைரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். 
இதையடுத்து அவர் ஒரு புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் விரைவில் தெலுங்குப் படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ள நிலையில், விஜய் சேதுபதியும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.
‘சைரா’ படத்தில் நடிப்பதன் மூலம் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் விஜய் சேது பதி நெருக்கமாகி உள்ளாராம். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon