ராஜமௌலி படத்துக்கு பெயர்சூட்டும் ரசிகர்கள்

ராஜமௌலி பல மொழிகளிலும் எடுக்கவுள்ள புதுப்படத்துக்கு தற் காலிகமாக ‘ஆர்ஆர்ஆர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்திற்கு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும் என  ரசிகர்கள் டுவீட் செய்தால் அந்தத் தலைப்பே படத்திற்குச் சூட்டப் படும் என்று படக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தெலுங் குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜ மௌலி தற்போது இயக்கி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 300 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது.
ஆந்திராவில் மிகவும் புகழ் பெற்ற அல்லூரி சீதாராம், கோமரம் பீமா என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் கதை 1920களின் பின்னணியில் நிகழ்கிறது. 
இப்படத்தில் அல்லூரி சீதா ராமாக ராம்சரணும் கோமரம் பீமா வாக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர்.