சமந்தா: குழந்தைகளே என்னுலகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை சமந்தா, “எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் நானும் தாயாகுவேன் என்று நினைக் கிறேன். குழந்தை பிறந்தபிறகு கண்டிப்பாக நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிடுவேன். அப்போது குழந்தைகளே என் உலகமாக இருக்கும். குழந்தைகளுக்குப் பிறகே என் கணவர்,” என்று கூறியுள்ளார்.
“நான் குழந்தைப் பருவத்தில் சில பிரச்சினை களைச் சந்தித்தேன். ஆனால் என் குழந்தையை அதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக்காமல் கூடவே இருந்து நன்றாக கவனித்துக்கொள்வேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கணவர் நாக சைதன் யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட் டுள்ளார். இருவரும் விடுமுறைக்காக வெளி நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு  கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.  
விஜய் சேதுபதி திருநங்கை ‌ஷில்பா கதாபாத் திரத்தில் நடிக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். 
இப்படத்தில் நடித்தது பற்றி சமந்தா கூறியபோது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஏற்கெனவே இந்தப் பாத்திரத்தில் நடிக்கும்படி கேட்டு முன்னணி நடிகைகள் சிலரை இயக்குநர் அணுகியிருக்கிறார். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் இயக்குநர் கேட்ட போது நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.
“எனது கதாபாத்திரம் பற்றி என் கணவர் நாக சைதன்யாவிடம் சொன்னபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அந்த வேடத்தில் நான் நடிப்பதாக அவரிடம் தெரிவித்துவிட்டேன். பட வெளியீட்டுக்குப் பிறகு யார் யார் என்னென்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது. 
“அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அது விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவரின் குறிப்பாக ஓட்டப்பந்தய வீராங் கனையின் கதையில் நடிப்பதற்கு ஆசை உள்ளது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பதற் கும் விருப்பம் உள்ளது,” என்கிறார் சமந்தா.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்