மனம் கவர்ந்த மணாளனைத் திருமணம் புரிய திரிஷா முடிவு

தனக்கு இப்போது யார் மீதும் காதல் வரவில்லை என்றும் தனக்குப் பிடித்த ஒருவரை விரைவில் திருமணம் செய்து, அவரையே தனது உலகமாக எண்ணி வாழ்நாள் முழுவதும் காதலிக்கப் போவதாகவும் கூறியுள்ளார் திரிஷா. 
இப்போது காதல் இல்லை என்றாலும் என் கண்ணில்படும் ஒருவர் என் மனம் கவர்ந்தவராக அமையும்பட்சத்தில், தயங்காமல் அவருக்கு என் கழுத்தை நீட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து திரிஷா கூறும்போது, “இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை விரைவில் நான் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. 
“அந்த அதிர்ஷ்டக்காரர் இவர்தான் என்று என் உள்மனம் கூறும்போது உடனே காலம்தாழ்த்தாமல் திருமணம் செய்து கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார். 
திரிஷாவின் பார்வையில் படப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக உள்ளது என்று கோலிவுட் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. 
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார், அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் யாரும் உறுதி செய்யவில்லை. முன்னதாக திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது.
ஆனால், அதற்கு மாறாக திரிஷாவுக்குத் தயாரிப் பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.  ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்