மீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா

மீண்டும் விஷால் ஜோடியாகும் தமன்னா

1 mins read
c78dd5d0-d6e3-4055-8cc1-84b4afe75f45
-

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'கத்தி சண்டை'. இந்தப் படத்தில் நடிகை தமன்னா முதன்முறையாக நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்தார். இந்நிலையில் 'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். இதனையடுத்து நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிகை தமன்னா நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.