கோயிலுக்குள் ‘செல்ஃபி’;  நடிகை நிவேதா மீது நடவடிக்கை

நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வரு கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் தடையை மீறி அவர் தன்னை தானே புகைப்படம் எடுத்து ஃபேஸ் புக்கில் வெளியிட்டார்.
இதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு காரணமாக வும் ‘செல்ஃபி’ மோகத்தைத் தவிர்க்கவும் பக்தர்கள் தங்க ளுடன் கைத்தொலைபேசியைக் கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’ படங்களில் நடித்துள்ள மதுரையைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் சில நாட் களுக்கு முன்பு மதுரை மீனாட் சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.
அப்போது அவரது உடைமை களைப் பரிசோதிக்காமல் கோயி லுக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
கோயிலுக்குள் நுழைந்த நடிகை நிவேதா பெத்துராஜ், ஆங்காங்கே நின்று தன்னைத் தானே கைத் தொலைபேசியால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் தமது படங்களை ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டார்.
இதனால் பக்தர்கள் சிலர் கொதிப்படைந்தனர்.
இதையடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட படங்களை நிவேதா அகற்றினார். 
இதுகுறித்துப் பேசிய விஸ்வ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன், “சாமானிய பக்தர்களிடம் தங் களது கெடுபிடியைக் காட்டும் காவல்துறையினர், நடிகை விவ காரத்தில் கெடுபிடியைக் காட் டாதது ஏன்,” என்று கேட்டார்.
விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.2019-03-23 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்