விஜய் படத்தின் கதை கசிந்ததாகத் தகவல்

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் காற்பந்து விளையாட்டை மைய மாகக் கொண்டது. சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் கதை வெளி யானதாகக் கூறப்படுகிறது.
விஜய்-கதிர் இருவரும் நண்பர்களாம். காற்பந்து வீரர்களான இருவரும் பின் னாளில் காற்பந்து பயிற்சியாளராக மாறு கின்றனர். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவரு டைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார். வில்லன்களை விஜய் பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த காற்பந்து அணியை எப்படி ‘சாம்பியன்’ ஆக்குகிறார் என்பதே கதை என்று சொல்லப்படுகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் தற்போது ‘தளபதி 63’ என அழைக்கப்பட்டு வருகிறது. 
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்