சிவகார்த்திகேயனின் 17வது படம் அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வுள்ளார். 
பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.  வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளி யாகி வருகிறது.
எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1 அன்று வெளியாகிறது. 
இதையடுத்து ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் இயக்கங் களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத் தில் சிவகார்த்திகேயன் கதாநாய கனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்தி கேயனின் 17வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்