சுடச் சுடச் செய்திகள்

பூஜா காந்தி: எனக்கும் குடும்பம் இருக்கிறது

பிரபல கன்னட நடிகையான பூஜா காந்தி, நட்சத்திர ஹோட்டலில் தங்கியதற்காக பணம் கொடுக் காததால் ஹோட்டல் நிர்வாகம் அவர் மீது புகார் செய்தது.
இதனால் கட்டணத்தின் ஒரு பகுதியை காவல்நிலையத்தில் செலுத்திய பூஜா பாக்கித் தொகைக்குக் கால அவகாசம் கேட்டார்.
மேலும் ஹோட்டல் கட்டணம்  கட்டாததாக வெளியான செய்தியில் பூஜா காந்தி, 2 ஆண்டுகளாக அந்த ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அனில் மென்சின்கையுடன் தங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பூஜா, விளக்கமளித்தார்.
“நான் நடிகை மட்டுமல்ல, சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். இது தொடர்பான பணிகளுக்காக ஹோட்டலில் அறை எடுத்து படத்தில் நடிக்கும் கலைஞர்களை தங்க வைப்பது வழக்கம். அந்த ஹோட்டல் எனக்கு தெரிந்த ஹோட்டல். சில நாட்கள் கழித்து பணம் கட்டுவது என் வழக்கம். இந்த முறை சற்று தாமதமாகி விட்டதால் அவர்கள் காவல்துறை வரைக்கும் சென்று விட்டனர்.
“அதுமட்டுமல்ல, அந்த ஹோட்டலில் நான் அனில்மென் சின்கையுடன் தங்கியிருந்ததாக  அவதூறு பரப்பியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா, அந்த ஹோட்டல் முழுக்க கேமராக்கள் உள்ளன. அனிலுடன் நான் இருக்கும் ஒரு காட்சியையாவது காட்ட முடியுமா? நான் ஒரு பெண் என்பதை மறந்துவிடாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது. அனிலுக்கும் குடும்பம் இருக்கிறது,” என்றார் பூஜா காந்தி.  
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon