‘ராட்சசன் ஒருவன் மகானாக மாறும் கதை’

தமிழ் தெரியாவிட்டாலும் தாம் ஏற்கும் தமிழ்ப் படங்களில் சிறு குறையும் இல்லாத அளவுக்கு கச்சி தமாக நடித்துக் கொடுப்பதாகக் கோடம்பாக்கத்தில் நற்பெயர் எடுத் துள்ளார் இளம் நாயகி ஷாலினி பாண்டே. அண்மையில் இவரை இவ்வாறு பாராட்டி இருப்பவர் ‘அயோக்யா’ படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன். இவர் ஏ.ஆர். முருகாதாசின் சீடர்.

‘அயோக்யா’தான் இவர் இயக் கும் முதல் படம். விஷால், ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஷாலினி காட்டிய அர்ப்பணிப்பும் மெனக்கெடலும் படக்குழுவை வெகு வாகக் கவர்ந்து விட்டதாம். “விஷாலுக்கு இதற்கு முன்பு ஜோடியாக நடிக்காத நடிகைதான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் வெங்கட் மோகன் உறுதியாக இருந்தார். ‘யாரைத் தேர்வு செய்யலாம் என யோசித்தபோது என் பெயர் நினைவுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி,” என்று சிரிக்கிறார் ஷாலினி. வெங்கட் மோகன் இவரைத் தொடர்பு கொண்டு கதையை விவ ரித்தாராம். கதையைக் கேட்டதும் இவருக்கும் பிடித்துப்போய் இருக்கி றது. “ஷாலினிக்குத் தமிழ் தெரியாது. ஆனால், அவருக்குத் தமிழ் தெரி யாது என்பது சுற்றி இருப்பவர்க ளுக்குத் தெரியாத மாதிரி பக்குவ மாக நடந்து கொள்வார்.