மீண்டும் நடிக்க விரும்பும் சுவாதி

மீண்டும் நடிக்க விரும்பும் சுவாதி

1 mins read
ded81f88-626f-4a23-8ee6-f12ab44bc9e9
-

'வான்மதி' படத்தில் அஜீத்துடனும், 'தேவா'வில் விஜய்யுடனும் நடித்து பிரபலமானவர் நடிகை சுவாதி. இப்படங்களைத் தொடர்ந்து பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹைதராபாத் சென்றுவிட்டார். தற்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். எனவே நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்கத் தயார் எனக் கூறுகிறார். "சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன். அண்மையில் ஒரு பயணத்தின் போது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிய பிறகு தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது," என்கிறார் சுவாதி.