‘விருது பெறுவதே லட்சியம்’

சிறந்த நடிகை எனப் பெயரும் விருதும் வாங்குவதே தமது லட்சியம் என்கிறார் இளம் நாயகி ஸ்ரீபல்லவி. 
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், ‘தாதா 87’ படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகி உள்ளார். 
இவ்வளவு சீக்கிரம் நடிகையாவோம் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடுபவர், தமது சினிமாப் பயணம் மிகச் சிறப்பாக அமையும் என நம்புவதாகச் சொல் கிறார். ஸ்ரீபல்லவியின் குடும்பத்தை ‘ஆசிரியர் குடும்பம்’ என்று தாராளமாகச் சொல்லலாம். 
ஏனெனில் இவரது தாயார் வினய சொரூப ராணி பள்ளியில் வேலை பார்க்கிறார். ஒரே தம்பி பிரசன்ன குமார் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில் இவரது தங்கையும் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 
இவரது தாத்தாவும் முன்னாள் தலைமை ஆசிரியராம். எனவே ஒரு மாற்றத்தை விரும்பி பொறியியல் படித்துள்ளார் ஸ்ரீபல்லவி. 
“படிக்கும்போதே எனக்கு நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. வீட்டில் ஊக்கப்படுத்தியதால் அதில் கவனம் செலுத்தினேன். பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் எனது திறமையை வெளிப் படுத்த நல்ல மேடையாக அமைந்தன. 
“அப்படி ஒரு கலைநிகழ்ச்சியில் எனது நடனத்தைப் பார்த்த உதவி இயக்குநர் ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத் தது. நடிக்க வருகிறாயா என்று அவர் கேட்ட போது முதலில் கேலி செய்வதாகவே நினைத் தேன். தொடர்ந்து அவர் பலமுறை அணுகிய பிறகுதான் மனதில் நம்பிக்கை ஏற்பட்டது. 
“சமூக வலைத்தளங்கள் மூலம் உங்களுடன் தொடர்பில் இருப்பவர் ஆணா, பெண்ணா என் பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உண்மையா, பொய்யா என்பதை அறிய காணொளி அழைப்பின் உதவியோடு பேசுங்கள். அதன்பிறகு உங்கள் உரையாடல்களைத் தொடருங்கள். முகம் தெரியாத மனிதர்களிடம் உங்கள் சுய குறிப்புகளை, புகைப் படங்களைப் பகிரவேண்டாம்.
“முகநூலில் காதலிப்பது தவறில்லை. ஆனால் காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல. அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லாமே கலந்ததுதான் வாழ்க்கை. காதலும் காமமும் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே,” என்று குறிப்பிடும் ஸ்ரீபல்லவிக்கு அதிக நண்பர்கள் இல்லையாம்.
வீடும், குடும்பத்தாரும் மட்டுமே தமது உலகம், தமக்கான சொர்க்கம் என்று கூறுகிறார். இவர் விருந்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதில்லை.
“என்னை வெளி இடங்களில் பார்ப்பதாக இருந்தால் குடும்பத்துடன் மட்டுமே பார்க்கமுடியும். சின்ன விஷயத்துக்கே உணர்ச்சிவசப்படுவேன். சமையல், நடனம் இரண்டிலும் தூள் கிளப்புவேன். ஆனால் ‘தாதா 87’ல் நடனத்துக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது,” என்று சொல்லும் ஸ்ரீபல்லவிக்கு நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக் கும் படங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் முதன்மையான விருப்பமாக உள்ளதாம்.