விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறாராம் இளம் நாயகி ரெபா மோனிகா ஜான். அவர் காற்பந்து வீராங்கனையாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் 'தளபதி 63' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக் கிறார். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கதைப்படி இதில் காற்பந்து பயிற்சியாளராக நடிக்கிறாராம் விஜய். இந்நிலையில் ரெபா மோனிகாவை இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் பெண்கள் காற்பந்து அணியைச் சேர்ந்த முக்கிய வீராங்கனை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் வலம் வருகிறாராம் ரெபா. "விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது நிறைவேறுவதில் மகிழ்ச்சி. அவருடன் நடிக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்," என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் ரெபா.
விஜய் படத்தில் ஒப்பந்தமான ரெபா
1 mins read
-