முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகும் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். இதில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ஜீவி பிரகாஷ் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுவார்களாம். மேலும் பிரகாஷ் ராஜ், சுமன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். யோகி பாபு, ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, சதீஷ் ஆகிய நால்வரது கூட்டணியில் நகைச்சுவைக்கு அறவே பஞ்சமிருக்காது என்கிறது படக்குழு. முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகும் இந்தப் படைப்பு அனைத்துத் தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறாராம் இயக்குநர் எம்.ராஜேஷ்.