சுயசரிதை எழுதவிருக்கும் இளையராஜா

கல்விப்பாடத்திட்டங்களில் இசைக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று திரை இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற விழா ஒன்றின்போது தெரிவித்தார்.
 
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இசையையும் ஒரு பாடமாக சேர்க்கவேண்டும் என்று இளையராஜா கூறினார். கணினி மென்பொருட்கள் உருவாக்கும் இசையைக் காட்டிலும் இசைக்கலைஞர்களால் உருவாக்கப்படும் இசைக்குத்தான் ஆற்றம் அதிகம் எனக் கூறினார்.

“என்னைப் பற்றி சுயசரிதை எழுத இருக்கிறேன். விரைவில் அது வெளிவரும்,” என்று அவர் கூறினார்.