திறமைக்கேற்ப ஊதியம் கேட்கும் ஓவியா

திறமைக்கேற்ப ஊதியம் கேட்கும் ஓவியா

1 mins read
ebe242a9-daaf-41b7-8bc3-0e2233d928f8
-

'90 எம்எல்' படத்தில் நடித்தது தொடர்பாக கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், எதுகுறித்தும் ஓவியா அலட்டிக்கொள்ளவதாக இல்லை. தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார். ஓவியா நடிப்பில் 'காஞ்சனா 3' மற்றும் 'கணேசா மீண்டும் சந்திப்போம்' என இரண்டு படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகின்றன. மேலும், 'களவாணி 2' மற்றும் ஆரவ்வுடன் ஓவியா ஆடியுள்ள 'ராஜபீமா' படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காண தயாராக உள்ளன. "நான் அதிகம் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுவதில் சிறிதும் உண்மை இல்லை. ஒருபக்கம் தோல்விப்பட நாயகி என்கிறார்கள். மற்றொரு பக்கம் சர்ச்சை படத்தில் நடித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். "நிலைமை இப்படி இருக்கும் போது யாருக்குத்தான் சம்பளத்தை உயர்த்த தோன்றும்? அதே சமயம் எனது உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ற சம்பளத்தைக் கேட்டுப் பெற தயங்க மாட்டேன். விமர்சனங்கள் எழுந்தாலும் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்கிறார் ஓவியா.