கதாநாயகியைப் பாராட்டிய ஜீவா

கதாநாயகியைப் பாராட்டிய ஜீவா

2 mins read
c00b718b-ac94-4db2-85df-467e56e945e1
-

நிக்கி கல்ராணி திறமை வாய்ந்த நடிகை எனப் பாராட்டி உள்ளார் நடிகர் ஜீவா. 'கீ' படத்தின் தயாரிப்புத் தரப்பு சார்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்ததாகவும், நிக்கி கல்ராணியைப் பார்த்த பிறகே அதிக படங்களில் நடிக்க வேண்டும் எனும் எண்ணம் மனதில் தோன்றியது என்றும் குறிப்பிட்டார். 'நாடோடிகள்', 'ஈட்டி', 'மிருதன்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தற்போது 'கீ' படத்தை தயாரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் பத்தாவது தயா ரிப்பாகும். இதில் கதாநாயகனாக ஜீவாவும் அவரது ஜோடியாக நிக்கி கல்ராணியும் நடித்துள்னர். காலீஸ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் இது. இவர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நவீன தொழில்நுட்பங்கள் நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான ஒரு பிரச்சினையை விவரிக்கும் படமாக உருவாகி உள்ளதாம் 'கீ'. "முன்பெல்லாம் வருடத்துக்கு ஒரு படம் நடித்தால் போதும் என்று நினைப்பேன். ஆனால் நிக்கி கல்ராணியைப் பார்த்ததும் அந்த முடிவை மாற்றிக்கொள்ளத் தோன்றியது. அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. "இப்படத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. "காலீஸ் போன்ற இளம் இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவுக்கு தேவை. புதுமுகம் என்றாலும் வித்தியாசமான கதை சொல்கிறார். இளம் இயக்குநர்கள் வந்தால் தான் புதிய எண்ணங்கள் தோன்றும். அத்தகைய புதிய எண்ணங்கள் இருந்தால் தான் பல பரிமாணங்களில் ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங் களை தர முடியும்," என்றார் ஜீவா. மேலும் 'கீ' படத்தில் ஆர்ஜே பாலாஜி, அனைகா ஆகிய இருவரும் அருமையாக நடித்துள்ளதாகப் பாராட்டிய அவர், படத்தின் காட் சிகள் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக திருப்தி தெரி வித்தார். இந்தப் படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியீடு காண இருப்பதாவும், ரசிகர்களின் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என்று நம்புவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் படத்தில் அனைகா, ஆர்.ஜே. பாலாஜி, பத்ம சூர்யா, சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.