பாபி சிம்ஹாவுக்கு வாய்ப்பு தர தயாரிப்பாளர்கள் தயக்கம்

நடிகர் பாபி சிம்ஹா மீது தயாரிப் பாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
‘அக்னி தேவி’ என்ற படத்தில் ஐந்து நாட்கள்தான் நடித்தேன். பின்னர் அதில் தனக்குப் பதிலாக ‘டூப்’ போட்டு நடிக்க வைத்தார்கள் எனத் தயாரிப்பாளர், இயக்குநர் மீது புகார் கூறி பாபி சிம்ஹா வழக்குத் தொடுத்தாராம்.
அந்தப் படத்தின் நாயகன் பாபி சிம்ஹா என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வேளையில் படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என பொய்யான ஒரு தகவலைப் பரப்பி அந்தப் படத்தின் திரை யீட்டையும் எப்படியாவது தடுக்கப் பார்த்தார் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டாலின் தெரிவித் தார்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் பாபி சிம்ஹா போகவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த சங்கங்களையும் அவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி தயாரிப்பாளர் சங்க உறுப் பினர்கள் பலர் கடந்த சில நாட் களாக எதிர்ப்புகளைத் தெரி வித்துவந்தனர்.
இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக முடிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு இந்த விவ காரம் குறித்து பேசினர். 
ஒவ்வொரு தயாரிப்பாளரும் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்று பல பிரச்சினை களுக்கு இடையே படத்தை எடுத்து முடிக்கின்றனர். 
தயாரிப்பாளர்களிடம் இருந்து நடிப்பதற்காக பல லட்சம், கோடி ரூபாய் என சம்பளம் வாங்கிக் கொண்டு அந்தப் படத்தில் நடிப்பவர்களே படத்தை வெளி யிடத் தடை கோருவது குறித்து பலர் வருத்தப்பட்டனர். 
மேலும் ‘அக்னி தேவி’ தயாரிப்பாளருக்கும் இயக்கு நருக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சல், கடும் நஷ்டம் ஆகியவை பாபி சிம்ஹாவால்தான் வந்தது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். பாபி சிம்ஹாவுக்கு தயாரிப்பாளர்கள் கடும் கண்டனமும் தெரிவித் தனர். இதற்கிடையே பாபி சிம்ஹாவுக்கு வாய்ப்பு தர மாட் டோம் என தனிப்பட்ட முறையில் சில தயாரிப்பாளர்கள் கூறியுள்ள தாகச் சொல்லப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon