சுடச் சுடச் செய்திகள்

‘ரவுடி பேபி’க்கு வலை வீசும் இயக்குநர் விஜய்

நடிகை சாய் பல்லவியை இயக்குநர் ஏ.எல். விஜய் இரண்டாவதாக திரு மணம் செய்யவுள்ளதாக கோலி வுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது என்று தமிழக நாளேடு ஒன்று குறிப்பிட்டது. முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.எல். விஜய். இவர், நடிகர் விஜய்யை வைத்து ‘தலைவா’, அஜித் நடித்த ‘கிரீடம்’, விக்ர மின் ‘தெய்வத்திரு மகள்’  ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவி யுடன் ‘வனமகன்’ என முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றிப் படங் களை தந்தவர். தற்போது  ஜி.வி. பிரகாஷ் நடிக் கும் ‘வாட்ச்மேன்’ மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல படங்களை இயக்கு கிறார். 
‘தலைவா’ படத்தில் ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் ஏற் பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி கடந்த 2017ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரு வருக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டது. திருமணமான வேகத்தில் இருவரும் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். 
இந்தச் சூழ்நிலையில் தனியாக உள்ள இயக்குநர் விஜய் இரண் டாவது திருமணம் செய்யவிருப்ப தாகச் சொல்லப்படுகிறது.
இம்முறை  வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவரான ‘ரவுடி பேபி’ பாடல் புகழ் நடிகை சாய் பல்லவியை அவர் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்தி வெளி யாகியுள்ளது.
இதற்கு காரணம், விஜய் இயக்கத்தில் வெளியான ‘கரு’ படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்தபோது இருவருக்கும்  இடை யில் நல்ல புரிதல் ஏற்பட்டு பின் காதலாக மாறியதாகக் கூறப்படு கிறது. இந்தக் காதல் தற்போது திருமணம் வரை சென்றுள்ளது.
இதனால் இருவரும் விரைவில் கைபிடிப்பார்கள் என்று கூறப்படு கிறது. ஆனால் இது வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்று பலர் வேண்டி வருகின்ற னர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon