நடிகர் சித்தார்த்தும் இயக்குநர் விக்னே‌ஷும் மோதல்

நடிகர் சித்தார்த்தும் இயக்குநர் விக்னே‌ஷும் மோதல்

1 mins read
14730c3b-d741-43cf-8c1b-420d144d948b
-
Google News Preferred Icon

ராதா ரவியின் கருத்துகள் குறித்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தார். நடிகர் சித்தார்த், இந்த விவகாரம் பற்றி மறைமுகமாக கருத்துக் கூறியபோது, 'ஒரு பிர பலமான பெண் கோபப்பட்டால் மட்டுமே தூங்கிக்கொண்டிருப் பவர்களை எழுப்புகிறது. தைரியம் என்பது இதுவல்ல. 'மீடூ' விவ காரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோகக் கதைகளை பகிர்ந்துகொண்டபோது, ஒரு சிலர் இதுபற்றி பேசாமல் அமைதியாக இருந்தனர் என்று சுட்டிக் காட் டினார். இதற்குப் பதிலளித்த விக் னேஷ் சிவன், "சோசியல் மீடியா வில் அமைதியாக இருக்கிறார் என்பதால் மட்டுமே அவர் அந்த விவகாரத்தில் ஆதரவாக இல்லை என அர்த்தமில்லை. நயன்தாரா எப்பொழுதுமே பெண்களின் நலனுக்காக அவர்கள் பாதுகாப்புக் காக பக்கபலமாக நின்றிருக்கிறார். இதையெல்லாம் அவர் விளம்பரப் படுத்திக் கொண்டதில்லை," என்று கூறினார். ஆனால் 'மீடு' விவகாரத்தில் விக்னேஷ் சிவன் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட் டால் நயன்தாராவைப் பற்றியே அவர் பேசுகிறார் என்று மீடுவால் பாதிக்கப்பட்ட ஒருவர் புலம்பி உள்ளார்.