காயத்ரி: சேதுபதியை ரசித்தேன்

காயத்ரி: சேதுபதியை ரசித்தேன்

3 mins read
b6303c76-0320-4edd-a139-5bb188cbfec8
-

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்கிறார் நடிகை காயத்ரி. அதேசமயம் இயக்குநராகும் எண்ண மெல்லாம் தமக்கு அறவே இல்லை என் றும் அண்மைய பேட்டியில் தெளிவு படுத்தியுள்ளார். நடிகைகளில் காயத்ரி சற்று வித்தியாசமானவர். அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாத திறமைசாலி என்றும் சவாலான வேடங்களை ஏற்கத் தயங்காதவர் என்றும் கோடம்பாக்கத்தில் நல்ல பெயர் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமல்ல, ஒரு படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி அசத்தினார். இதையடுத்து இயக்குநராகும் எண் ணத்துடன் அவர் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை திட்ட வட்டமாக மறுத்துள் ளார் காயத்ரி. "திரையுலகில் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட் டேன். "அதனால் தான் உதவி இயக்குநராக பணியாற்றி னேன். மற்றபடி ஒரு படத்தைத் தனித்து இயக்க வேண்டும் எனும் ஆசை இதுவரை என் மனதில் எழுந்த தில்லை. "அதேசமயம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் இப்போதே தீர்மா னித்துவிட முடி யாது," என்கிறார் காயத்ரி. சில படங்களில் நடித்து முடிப்பதற் குள் எப்போது திருமணம் என்று கேட்கப்படுவதை இவர் விரும்பவில் லையாம். அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தொடர வேண்டும் என்றே விரும்புகிறாராம். "எனது திரைப்பயணம் இப்போதுதான் துவங்கி உள் ளது. அதற்குள் திருமணம் குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. ஒருவிஷயம் நிம்மதி அளிக்கிறது. திருமணம் நடந்தால் நடிப்பைக் கைவிடவேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. எனவே திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். "நடிகர்களில் விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமானவர் என்றும் மிகுந்த திறமை சாலி என்றும் பாராட்டுகிறார் காயத்ரி. அண்மையில் அவரது அழகில் மயங்கிப் போனதாகவும் சொல்கிறார். "விஜய் சேதுபதியுடன் அடுத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஒவ்வொரு படத்திலும் எனக்கும் அவருக்கும் இடையே நடிப்பில் ஒருவித போட்டி நிலவும். "'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் முன்னோட் டத்தில் அவரைப் பார்த்தபோது ரொம்பப் பொறாமையாக இருந்தது. இதை அவரிடமே வெளிப்படையாகச் சொன்னேன். தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார். "அப்படிப்பட்ட முன்னணி நடிகர்கள் தான் செல்லும் இடங்களில் எல்லாம் எனது நடிப் பைப் பாராட்டுகிறார் என்று கேள்விப்பட் போது ஆச்சரியமாக இருந்தது. அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் எனும் பொறுப்பை இப்போது சுமந்திருக்கிறேன். "சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ‌ஷில்பா கதாபாத்திரத்தில் மிக அழகாக இருக்கிறார் விஜய் சேதுபதி. ஆண் தோற்றத்தில் கூட அவர் அழகை நான் இந்தளவு ரசித்ததில்லை என்கிறார் காயத்ரி. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா குறித்து பேசிய அவர், மிகவும் கண்டிப்பானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காட்சி யைப் பலமுறை எடுத்தபிறகுதான் திருப்தி அடைவாராம். எனக்கோ எந்தவொரு காட்சியையும் முதல் 'டேக்'கிலேயே சரியாக எடுத்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு. "படப்பிடிப்பில் என்னாகுமோ என்று பயந்து கொண்டே சென்றேன். ஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தார். எல்லோரையும் அனுசரித்துச் செல்கிறார். அதேசமயம் சின்ன சின்ன விஷயங்களைக் கூட தாம் நினைத்தபடி செய்யவேண்டும் என விரும்புகிறார். அதற்காக அவர் தனிப்பட்ட வகையில் மிகவும் மெனக்கெடுகிறார் என்பதே உண்மை. "நான் இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கும்போது பிற நடிகர்களை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகளை இயக்குநர் எடுத்து இருந்தார். அவர்களில் ஒருவர் என்னிடம் 25வது 'டேக்'கில் தான் இயக்குநர் திருப்தி அடைந்ததாகச் சொன்னார். எனக்குப் பயமாகிவிட்டது. ஆனால் பயந்ததுபோல் அதிக 'டேக்'குகள் வாங்கவில்லை." "அம்மாவாக நடித்தது ஏன்? "கதையைக் கேட்டதும் நான்கூட யோசித்தேன். ஆனால் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். "எனவே இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். எனவே சம்மதம் கூறினேன்," என்கிறார் காயத்ரி.