கதையில் மாற்றம் செய்யக்கூடாது எனும் நிபந்தனையுடன்தான் 'அக்னி தேவி' படத்தில் நடிக்க தாம் ஒப்புக்கொண்டதாக நடிகர் பாபி சிம்ஹா கூறியுள்ளார். ஆனால், இந்த நிபந்தனையை மீறி, தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி அப்படக்குழுவினர் செயல்பட்டதாகவும் இதனால் தாம் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 'அக்னிதேவி' படம் தொடர்பாக அதன் நாயகனான இவருக்கும் படத் தயாரிப்புத் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. எனினும் சில சிக்கல்களைக் கடந்து எப்படியோ படத்தை வெளி யிட்டுள்ளார் அதன் தயாரிப்பாளர். இந்நிலையில் பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து ஒருசிலர் தம்மைப் பழிவாங்க நினைப்பதாக கொந்தளித்துள்ளார் பாபி சிம்ஹா. இத்தகைய பழிவாங்கும் போக்கு கண்டிக் கத்தக்கது என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். "எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுப் பதாக என்னிடம் தெரிவித்தனர். அவரது கதையில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன். எனது இந்த நிபந்தனையைத் தயாரிப் பாளரும் இயக்குநரும் ஏற்றுக்கொண்ட பிறகே நடிக்கச் சம்மதித்தேன். "ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது சம்பந்தமில்லாத சில காட்சிகளை எல்லாம் இயக்குநர் படமாக்கினார். அதற்கு தொடக்கத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். "இது போதாது என்று இயக்குநரின் உறவினர் என்று கூறிக்கொண்டு இன்னொருவர் திடீரென படத்தை இயக்குவதில் இணைந்துகொண்டார். சண்டைக் கலைஞர்கள் சங்கத்துக்கு விவரம் தெரிவிக்காமலேயே ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினர். "இப்படி அடுத்தடுத்து நடைபெற்ற விஷயங்கள் அதிருப்தி அளித்ததால் இந்தப் படத்திலிருந்து நானாக விலகி விட்டேன். ஆனால், கணினித் தொழில்நுட்பத்துடன் சில காட்சிகளை உருவாக்கிச் சேர்த்துள்ளனர். "மேலும், எனக்குத் தெரியாமல் வேறு ஒருவரை வைத்து எனது கதாபாத்திரத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்," என்று தெரிவித்துள்ளார் பாபி சிம்ஹா.
என்னைப் பழிவாங்குகிறார்கள் - பாபி சிம்ஹா
2 mins read
-

