'சாய் பல்லவியை காதலிக்கவில்லை'

'சாய் பல்லவியை காதலிக்கவில்லை'

1 mins read
1adfd70f-6667-4b7f-9609-d5c9340e228a
-

தமக்கும் இளம் நாயகி சாய் பல்லவிக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலை இயக்குநர் ஏ.எல். விஜய் மறுத்துள்ளார். இருவரும் காதலிப்பதாக கூறப்படுவதும் உண்மை யல்ல என்று அவர் கூறியுள்ளார். விஜய் இயக்கிய 'கரு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சாய் பல்லவி. அதற்கு முன்பு மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில் 'கரு' படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்க்கும் சாய் பல்லவிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டனர். இதுகுறித்து அறிந்த ஏ.எல். விஜய் தற்போது விளக்கமளித்துள்ளார். "நானும் ஒரு நடிகையும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான தகவல் வெறும் வதந்தி தான். எங்களுக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை. இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்," என விஜய் தெரிவித்துள்ளார்.