டோனியை காதலிக்கும் மேகா

டோனியை காதலிக்கும் மேகா

1 mins read
8f5abe90-7dc0-4adb-9deb-fc3ccea5f834
மேகா ஆகாஷ். -

தாம் கிரிக்கெட் வீரர் டோனியின் தீவிர ரசிகை என்கிறார் இளம் நாயகி மேகா ஆகாஷ். 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் நாயகியாக நடித்துள்ள இவருக்கு நடிகர்களில் அஜித், விஜய் ஆகிய இருவரையும் ரொம்பப் பிடிக்குமாம். "விஜய்யை நேரில் சந்தித்தால் எனக்கு நடனம் கற்றுத் தரும்படி கேட்பேன். அஜித்தைப் பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என விசாரிப்பேன். "ஆனால், டோனியைப் பார்த்தால் சற்றும் யோசிக்காமல் அவரைக் காதலிப்பதாகச் சொல் வேன்" என்கிறார் மேகா ஆகாஷ். "ஆனால், ஏற்கெனவே திரு மணமாகிவிட்டதால் இவரது காதலை டோனி ஏற்கமாட்டார், இதை நினைவில் கொள்வது நல்லது," என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.