சண்டைக் காட்சியில் விபத்து; விஷால் மருத்துவமனையில்

சண்டைக் காட்சியில் விபத்து; விஷால் மருத்துவமனையில்

1 mins read
b3ff1b14-0bcc-4597-b5a6-07fddc338b00
-

நடிகர் விஷால் சண்டைக் காட்சி யில் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பலத்த காயம் அடைந்ததால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய படத்தில் தமன்னாவும் ஐஸ்வர்யா லட்சுமி யும் இரு கதாநாயகிகளாக நடிக் கின்றனர். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. யுவன் இசையமைக்க, டிரெ டன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு துருக்கி யின் கேப்படோசியாவில் நடைபெற் றது. அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அப்போது பைக்கில் இருந்த படியே சண்டை போட்ட விஷால், கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரது கை, கால் எலும்புகளில் பாதிப்பும் தசை பிசகும் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டு விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார். அவருக்கு கை, காலில் கட்டு போடப்பட்டுள்ளது. அவர் ஓய்வு எடுப்பது முக்கியம் என்றும் மருத் துவர்கள் கூறியுள்ளனர். அண்மையில் ஹைதராபாத்தில் விஷால்-அனிஷா திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் இருவருக் கும் திருமணம் நடைபெற உள் ளது. இதுதொடர்பான தேதியை இரு குடும்பத்தாரும் விரைவில் பேசி முடிவு செய்ய உள்ளனர்.