அடுத்த மாதம் 10 புதிய படங்கள் வெளியீடு

அடுத்த மாதம் 10 புதிய படங்கள் வெளியீடு

1 mins read
1f089e56-06c6-4766-8009-579640514623
-

தமிழகத்தில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையிலும் ஏப்ரல் மாதம் 10 புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. ஏப்ரல் 4ல் 'உறியடி', 'நட்பே துணை', 'குப்பத்து ராஜா', 'ஒரு கதை சொல்லட்டுமா' ஆகிய 4 படங்களும் ஏப்ரல் 12ல் 'கீ', 'தேவராட்டம்', 'வாட்ச்மேன்' ஆகிய 3 படங்களும் ஏப்ரல் 19ல் 'காஞ்சனா-3', 'அலாவுதீன் அற்புத புகைப்படக் கருவி', வெள்ளைப்பூக்கள்' ஆகிய 3 படங்களும் வெளியாகின்றன. 'குப்பத்து ராஜா' படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, பார்த்திபனும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். 'நட்பே துணை' படத்தில் இசையமைப்பாளர் ஆதி நாயகனாக நடிக்க, குஷ்பு தயாரிப்பில் நகைச்சுவை படமாகத் தயாராகி உள்ளது. 'கீ' படத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க, திகில் படமாக உருவாகி உள்ளது. 'தேவராட்டம்' படத்தில் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் (படத்தில்) ஜோடியாக வருகின்றனர். முத்தையா இயக்கத்தில் அதிரடிப் படமாக உருவாகி உள்ளது. விஜய் இயக்கும் 'வாட்ச்மேன்' படம் ஜீ.வி.பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் திகில் படமாகத் தயாராகி உள்ளது. 'வெள்ளைப்பூக்கள்' படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.