சுடச் சுடச் செய்திகள்

இரு அசுரன்களாக தனு‌ஷின் அர்ப்பணிப்பில் ஆச்சர்யம்

வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் அசுரத் தனமான நடிப்பில் மிரட்டி வரு வதாக தெரியவந்துள்ளது.
அப்பா, மகன் என இரு வித்தி யாசமான பாத்திரங்களில் தனுஷ் நடித்து வருவதாகவும் இதில் அப்பா பாத்திரத்தில் நடிக்கும் தனு‌ஷின் வயது 45 என்றும் இயக் குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். 
‘மாரி 2’ படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியீடு ஆவதில் இன்னும் சிக்கல்கள்  நீடிக்கின்றன. 
இப்படத்தை அடுத்து எடுக்கப் பட்டு வரும் ‘அசுரன்’ படம் பற்றி வெற்றிமாறன் கூறுகையில், “இப் படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் தான் எதிர் பார்த்ததைவிடவும் நல்ல ஒத்து ழைப்பையும் அபார நடிப்புத் திறமை யையும் வெளிப்படுத்தி வருகின் றனர். இதனால் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். ‘அசுரன்’ படத்தில் தந்தை தனு‌ஷின் கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் அதில் அசுரத்தனமான நடிப்பு மிரட்டலாக இருக்கும்.  வெக்கை நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.
“இப்படத்தில் இடம்பெறும் ஒரு மலையேறும் காட்சியை கிட்டத் தட்ட 6 மணிநேரம் படமாக்கி னேன். அப்போது எவ்வித சோர் வையும் சலிப்பையும் வெளிப் படுத்தாமல் அர்ப்பணிப்புடன் தனுஷ் நடித்தார். அவருடன் பணி புரியும் ஒவ்வொரு படத்திலும் அவர் என்னை நடிப்பால் ஆச்ச ரியப்படுத்தி வருகிறார்,”  என்று தெரிவித்துள்ளார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon