சாய் பல்லவி: சிரித்தால் முகம் சிவந்துவிடும்

சாய் பல்லவி: சிரித்தால் முகம் சிவந்துவிடும்

1 mins read
0e7ab491-6a76-40cd-9b61-77c253b571b4
-

நடிகை சாய் பல்லவியின் அழகே அவரது முகத்தில் இருக்கும் அந்தச் சிகப்பழகும், அவரின் முகபாவனை, நடனமும்தான். அவர் வெகுநாட்களுக்கு முன்னர் கொடுத்த ஒரு நேர்காணலின்போது, உங்கள் முகத்தில் என்ன முகப்பருவா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே, "அது முகப்பரு எல்லாம் இல்லை, அது 'ரோசாசியா' எனும் தோல் நோய். அதாவது ரத்த நாளங்கள் விரிவடையும் நோய். அப்படி ரத்த நாளங்கள் முகத்தில் விரிவ டையும்போது அங்கு மட்டும் மிகவும் சிகப்பாகத் தோற்றம் அளிக்கும். "பெரும்பாலும் முகத் தசைகளில் கன்னங்கள், மூக்குப் பகுதியில் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும். "இது ஒரு வகை நோய் என்றாலும், எப்போதெல் லாம் நான் சிரிக்கின்றேனோ, புகைப்படத்திற்கு 'போஸ்' கொடுக்கின்றேனோ அப்போதெல்லாம் என் முகம் சிவந்துவிடும். அதுவே பலரை ஈர்ப்ப தற்கு காரணம்," எனத் தெரிவித்துள்ளார். சாய் பல்லவி 'மாரி 2' படத்தில் தனு‌ஷுடன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடலும் 'சூப்பர் ஹிட்' ஆனது. இதற்கு முன்னதாக 'பிரேமம்' படத்தின் மூலம் இவரது நடிப்பு வெளியுலகிற்கு தெரியவந்தது.