திருநங்கை விஜய் சேதுபதிக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு

திருநங்கை விஜய் சேதுபதிக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு

2 mins read
2801a10c-5de8-4694-a592-2a6eeeb91b2f
-

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக நடிப் பில் முத்திரை பதித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளிவந்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின் றன. இப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். இப்படம் சில தினங்களுக்கு முன் வெளிவந்த நயன்தாராவின் 'ஐரா' படத்தை ஓரங்கட்டி விட்டதாகவும் கூறப் படுகிறது. இந்திய சினிமா, கடந்த சில ஆண்டுகளாக அசுரவேகத்துடன் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என்ற நிலையை அண்மைகால தமிழ், தெலுங்குப் படங்கள் முறியடித்து வருகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு ஊடகங்கள் பலவும் நல்ல மாதிரியான விமர் சனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தைப் பற்றி அமெ ரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையும் விமர்சனம் வெளியிட்டுள்ளது. இந்த விமர்சனத்தில் இப்படத்தின் இயக்குநர் தியாக ராஜன் குமாரராஜாவை வெகு வாகப் பாராட்டியுள்ளதுடன் விஜய் சேதுபதி, சமந்தாவின் நடிப்பையும் பாத்திரத்தையும் கோடிட்டுக் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளது. 'சூப்பர் டீலக்ஸ்' படம் ஒரு தனித்துவமிக்க படம் என்றும் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்திருந்தபோதி லும் சமந்தா தனது பாத்திரத்தை துணிச்சலாக ஏற்று நடித்ததற்கு கிடைத்த வெகுமதியாகவும் இந்த விமர்சனம் பார்க்கப்படுகிறது. 'சூப்பர் டீலக்ஸ்' படம் முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ.43 லட்சம் வரையில் வசூல் செய்ததாகவும் இந்தப் படம் நயன் தாரா நடித்துள்ள 'ஐரா' திரைப் படத்தை ஓரங்கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் வெளியான 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய வெற்றிப் படங்களின் வரிசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படமும் சாதனைப் படமாக இடம்பிடித்துள்ளது. முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் சென்னை யில் மட்டும் ரூ.43 லட்சம் வசூல் செய்துள்ளது. இதேபோன்று அமெ ரிக்க பாக்ஸ் ஆபிசில் 69,44,000 (100,000 டாலர்) வசூல் செய் துள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.