'தேவி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டு கள் கழித்து 'தேவி +2' என்ற பெயரில் மீண்டும் மிரட்ட வருகி றது அதே கூட்டணி. 'தேவி' படத்தில் நகைச்சுவை, அதிரடி என இரண்டையும் எவ்வளவு சுவாரஸ்யமாகக் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சுவாரஸ்யமாக கொடுத்திருந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். தமன்னா, பிரபுதேவாவின் நடிப் பும் வித்தியாசமாக அமைந்ததால் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே 'தேவி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தற்போது 'தேவி +2' என்ற பெயரில் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. 'தேவி +2' என்கிற தலைப்புக்கு என்ன காரணம் எனப் படக் குழுவிடம் கேட்டபோது, படத்தின் கதைக்காக இப்படி தலைப்பு வைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்தது. அதாவது தேவி முதல் பாகத் தில் தமன்னா உடலில் ஒரு நடிகையின் ஆவி புகுந்துவிடும். ஆனால் இரண்டாம் பாகத்தில் ஒரு ஆவிக்குப் பதில் இரண்டு ஆவிகள் புகுந்து கொள்கிறது. அதுவும் தமன்னா உடலில் கிடையாது. பிரபுதேவா உடலில். இரண்டு ஆவிகள் ஒரே உடலில் வரும்போது எப்படி அத களம் செய்யும் என்பதை நகைச் சுவையான திரைக்கதை வாயிலாக கூறுகிறாள் 'தேவி +2'. ஆவிகளைச் சமாளித்து, பிரபு தேவாவை இந்தப் பிரச்சினையில் இருந்து தமன்னா எப்படி மீட்கிறார் என்பதே இதன் கதை. பிரபுதேவா, தமன்னா தவிர முதல் பாகத்தில் நடித்த சோனு சூட் உள்ளிட்ட வேறு சில முக்கிய நடிகர்களும் இதில் வருகிறார்கள். முதல் பாகத்தில் இல்லாத இரண்டு புதிய கதாபாத்திரங்களை இதில் புதிதாக சேர்ந்திருக்கிறார் கள். அவர்களில் ஒருவர், நந்திதா சுவேதா. மற்றொருவர் டிம்பிள் ஹயாதி. இவர் தெலுங்கில் 'கல்ஃப்' படத்தில் நடித்தவர்.
தேவி +2: பிரபுதேவாவை ஆட்டிப்படைக்கும் இரட்டை ஆவிகள்
2 mins read
-

