60 வயது தோற்றத்தில் டாப்சி

60 வயது தோற்றத்தில் டாப்சி

1 mins read
d6655057-a621-4697-a932-8632490a9407
-

'சாந்த் கி ஆங்க்' என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய படத்தில், 60 வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை டாப்சி சம்மதம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சந்த்ரோ டோமர், பிரகா‌ஷி டோமர். இருவருக்குமே 80 வயதுக்கு மேல் ஆகிறது. இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறி தவறாமல் சுடுவதில் திறமை யானவர்கள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் 'சாந்த் கி ஆங்க்'. இதில் பிரகா‌ஷி டோமர் கதாபாத் திரத்தில் பூமி பெடுன்கர் நடிக்கிறார். சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். இவர்கள் இருவருமே இள வயது நடிகைகள். ஆனால் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளனர். இதுபற்றி டாப்சி கூறும் போது, "60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத் தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களி லேயே இதுதான் மிகவும் சவாலானது. "இக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத் தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்துப் பயிற்சி பெற்றேன்," என்றார்.