ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

2 mins read
79c6a74f-e326-4322-90d5-8a3898db8828
ராதிகா ஆப்தே.  -

"பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வெற்றி, நடிகைகள் குறித்தும் அவர்களின் திறமை குறித்து திரைத்துறை கொண்டிருந்த கருத்தை மாற்றி யிருக்கிறதா என்றால், இன்னும் அந்த மாற்றம் முழுமையாக நிகழவில்லை என்றுதான் கூறுவேன்," என்கிறார் ராதிகா ஆப்தே. "இன்னும் நடிகைகளுக்குச் சமமான அல்லது போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இங்கே இன்னும் நிறைய மாற்றங்கள் வரவேண்டும். அதேநேரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதையும் உணர்கிறேன். "என்னைப் பொறுத்தவரை நான் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுமே முக்கிய மானவைதான், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டவைதான். "சினிமாவில் நடிகர்களுக்கும் நடிகை களுக்கும் இடையே பெரிய அளவில் சம்பள வேறுபாடு இருக்கத்தான் செய் கிறது. ஆனால் நடிகர்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் சினிமாக்கள் தான் வசூலைக் குவிக்கிறது. அதுவே அவர்களது சம்பள உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது. "இன்றைக்கும் 'ஸ்டார் வேல்யூ' என்பதற்கு ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது. ஒரு படத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தால், அதற்கு நல்ல 'ஓபனிங்' இருக்கும். அதேநேரம் மோசமான கதை அமைப்பு இருந்தால் நாம் தப்பிக்கமுடியாது. ஒரு படத்தில் புதிதாக எதுவும் இல்லா விட்டால், அதில் பல நட்சத்திரங்கள் நடித் திருந்தாலும் ஓடாது. நல்ல உள்ளடக்கம், விளம்பரம் காரணமாகவே சிறுபடங்கள் ஓடுகின்றன. ஆனால் 'ஸ்டார் வேல்யூ' என்பது ஒரேயடியாக முடிந்துவிடாது. எல்லா சிறுபடங் களும் வெற்றிபெறும் என்று கருதி விடவும் முடியாது. குறிப்பிட்ட சில அம்சங்கள் இருந்தால்தான் ஒரு படம் வெற்றிபெறும். நாம் ஒன்றிரண்டு உதா ரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சூழல் மாறிவிட்டது என்று கூறமுடியாது. ஒரு நீண்ட காலகட்டத்திற்கு பிறகுதான் உண்மை நிலை தெரியவரும். "திரைத்துறையில் என் பயணத்தை நான் திரும்பிப் பார்ப்பதில்லை. உண் மையாகவே அப்படிச் செய்வதில்லை. இப்போதைக்கு, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றுதான் நான் பார்க்கிறேன். நான் நடித்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2018 சிறந்த ஆண்டு. அவை எல்லாமே வெற் றியும் பெற்றன. நான் இப்போது எனக்கான சிறந்த கதாபாத் திரங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்," என்கிறார் ராதிகா ஆப்தே.