தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரியங்கா: விவாகரத்து என்பது கட்டுக்கதை

2 mins read
13b27c45-3c9b-4699-8a05-d75ccb977276
தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் பிரியங்கா சோப்ரா. -

"மோகம் 30 நாள், ஆசை அறுபது நாள்' என்பது போல்தான் சில சினிமா நடிகர்களின் காதலும் கல்யாணமும். பிரியங்காவும் திரு மணம் செய்து நான்கு மாதங்கள் ஆவதற்குள்ளாகவே கணவரை விட்டு பிரிந்துவிட்டார்," என்று ஊடகங்கள் திரைச்செய்திகளை வெளியிட்டிருந்தன. "இந்தச் செய்திகளை எல்லாம் ஒன்றுக்கு இரண்டாகத் திரித்து வெளியிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை. நாங்கள் விவா கரத்து செய்வதாகக் கூறுவது எல்லாம் கட்டுக்கதை," என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து செய்துகொள்ளத் தயாராகி வருவ தாக லண்டனில் இருந்து வெளி யாகும் பத்திரிகையில் செய்தி வெளியானது. இச்செய்தி இந்திப்பட உல கில் பலர் மத்தியிலும் பரபரப்பை கூட்டியது. "பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத் துக்குப் பிறகு சுமுகமான உறவு இல்லை. தங்களது பணியைத் தொடர்வது, விருந்துக்குச் செல் வது உள்ளிட்ட விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து ஒற்றுமை இல்லை. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக் கொள்ளமுடிய வில்லை என்ற வருத்தம் பிரி யங்காவுக்கு உள்ளது. "திருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா, இப்போது கடும் கோபக்காரராக இருக் கிறார். 36 வயது நிரம்பிய அவர் 21 வயது நிக் ஜோனாசுடன் பார்ட்டிகளுக்குச் செல்வதையே அதிகம் விரும்புவதால் கண வர் குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர் என்றும் இதனால் இருவரும் விவாகரத்துக்குத் தயாராகி வருகிறார்கள் என்றும் லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. "விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான்," என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.