இயக்குநர் மகேந்திரன் காலமானார்

இயக்குநர் மகேந்திரன் காலமானார்

1 mins read
86af9c12-40b5-487f-928c-38959e9ece6e
இயக்குநர் மகேந்திரன். -

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் 79 வயதில் காலமானார்.

'முள்ளும் மலரும்' திரைப்படத்தை இயக்கிய அவர், 1980களில் பிரபலமடையத் தொடங்கினார். 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' உள்ளிட்ட அவரது படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தன.

இயக்குநராக மட்டுமின்றி சில படங்களில் அவர் நடிகராகவும் இடம்பெற்றிருக்கிறார். 'தெறி', 'நிமிர்' 'சீதக்காதி' உள்ளிட்ட படங்களில் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் எளிதில் மறக்க முடியாதவை.

அவரது மறைவு குறித்து திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.