ஒரு கதையைக் கேட்கும்போது முதல் பத்து நிமிடங்களிலேயே அது நல்ல கதையா இல்லையா என்பதை உணர முடியும் என்கி றார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். 'குப்பத்து ராஜா' படத்தின் கதையை கேட்டபோது அது நல்ல கதை என்ற உணர்வு தொடக்கத் திலேயே மனதில் தோன்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'குப்பத்து ராஜா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் ஜி.வி.பிரகாஷ், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.ஜி.ராஜேந்திரன் என்ற கதா பாத்திரத்தில் பார்த்திபனும் அசத்தியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசை தம்மை மிரள வைத்ததாகக் குறிப்பிட்டார். "ஜி.வி.யின் இசையைப் போன்று அவரது நடிப்பும் சிறப்பாகவே உள்ளது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரியான நடிகர்கள் இந்தக் காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம்.எஸ்.பாஸ்கர் போக்கியிருக்கிறார்," என்றார் பார்த்திபன். படத்தின் இயக்குநர் பாபா பாஸ்கர், ஹிட்லரைப் போல் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் என்றபோது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
'இசையைப் போல் நடிப்பும் நன்றாக உள்ளது'
1 mins read
'குப்பத்து ராஜா' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் ஜி.வி.பிரகாஷ். -

