சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியும் என இயக்குநர் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாகவும் ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவா நடிக்கும் புதிய படத்தில் பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவர் வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்றும் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்யும் கலகலப்பான முதியவர் வேடத்தில் நடிப்பதாகவும் இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் 'கென்னடி கிளப்' படத்தில் நடித்து வருகிறார் பாரதிராஜா. பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் பாரதிராஜா
1 mins read
-

