சக நடிகைகளுக்கு உதவும் சமந்தா

சக நடிகைகளுக்கு உதவும் சமந்தா

1 mins read
f55ca693-2fff-42db-8f12-46d0260997a1
-

நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஓர் அமைப்பை நிறுவ வேண்டும் என கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த அமைப்பு தமிழ் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லை, சம்பள விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டு நல்ல தீர்வைக் காண முற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அமைப்பில் சமந்தாவுக்கு முக்கிய பொறுப்பு தரப்படுகிறதாம். இது தொடர்பாக அவரே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினாராம். அச்சமயம் தனது சக நடிகைகளுக்கு தம்மால் ஆன உதவிகளைச் செய்ய, உழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினாராம். அவரது நல்ல மனதைப் பலரும் பாராட்டியுள்ளனர்.2019-04-03 06:10:00 +0800