சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கா சென்று ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறேன்

கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகை என்ற உயரத்திற்கு சென்று உச்சம் தொடவில்லை என்றாலும் தனது ‘ஹாலிவுட்’ கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தில் காணப்படுகிறார் நிவேதா பெத்துராஜ். 
‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்துப் பிரபலமானார். அவர் நடித்த ‘பொன்மாணிக்கவேல்’,  ‘ஜகஜால கில்லாடி’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட பல படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
திரையுலகில் அடுத்த கட் டத்தை நோக்கி நகரப்போவதாக கூறியுள்ள நிவேதா, “தமிழ்ப் படங் களில் நடித்ததில் மகிழ்ச்சி. அடுத்து அமெரிக்கா சென்று ‘ஹாலிவுட்’ படத்தில் நடிக்க உள்ளேன். வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா போய்விடுவேன்.
“இந்த விஷயத்தில் எனது வழிகாட்டியாக இருப்பவர் பிரி யங்கா சோப்ரா. நடிப்பில் நிறைய சாதிக்கவேண்டும் என்ற அடங் காத வெறி உள்ளது. அதை ‘ஹாலிவுட்’ படத்தில் தீர்த்துக் கொள்வேன்,” என்று கூறியுள்ளார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon