நடிகை நமீதா ரசிகர்கள் பலரையும் மச்சான் என்று செல்லமாக அழைப்பதும் பேசுவதும் பலரும் அறிந்ததே. இப்போது இதற்கு நேர்மாறாக நடிகை சாய் பிரியங் காவை அவரது நண்பர்கள், "என்ன மச்சான், எப்படி போய்க்கொண்டுள்ளது வாழ்க்கை?" என்று உரிமை யோடு நலம் விசாரித்து வருகின்றனர். 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் சாய் பிரி யங்கா ரத், "எனக்கு பெண் தோழிகளை விடவும் ஆண் நண்பர்களே அதிகம்," என்று கூறியுள்ளார். இந்த நண்பர்களுடன் நான் எந்தவித கூச்சமும் இன்றி பழகுவேன். அவர்கள் என்னை 'மச்சான்' என்றுதான் அழைப்பார்கள். என்னை ஒரு பெண்ணாகவே அவர்கள் பார்க்கமாட்டார்கள். அந்த அளவுக்கு நாங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக பாசத் துடன் பழகிவருகிறோம்," என்று கூறி யுள்ளார். தமிழகத்தின் திரைச்செய்தி ஊடகங் களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கோவை எனது சொந்த ஊர். சென்னையில் குடியேறி உள்ளேன். தற்போது 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். இப் படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. "என் முதல் படம் 'சூதுகவ்வும்', அதன் பிறகு 'மெட்ரோ', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உள் ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். "கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் சண் டைக் காட்சிகளில் கடுமையாகப் பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். ஆண்களைவிட பத்து மடங்கு அதிக மாக பெண்கள் கோபப் படுவார்கள். "பெண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் எதிரில் யார் வந்தாலும் கவலைப்படமாட்டார்கள் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தும். "யாரையாவது அடிக்கவேண்டும் என்றால் சும்மாவெல்லாம் அடிக்கமுடியாது; உண்மையாகவே அடிச்சிடுவேன். ஒரு காட்சியில் நானும் வேலுபிரபாகரனும் நடிக்கும்போது அப்படித்தான் அவரை அடித்துவிட்டேன். "உடம்பை பராமரிப்பதில் நான் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. நான் ஒரு சோம்பேறி, சாப்பிட்டு நன்றாகத் தூங்குவேன். படத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ சொன்னால் அப்பொழுது அதில் நிச்சயம் அக்கறை காட்டுவேன். "நான் அடக்கமான 'அல்ட்ரா மாடர்ன்' பொண்ணு. வெளியில் அட்டகாசமாக ஆடை அலங்காரத்துடன் செல்வேன். வீட்டுக்குள் சாதா ரண பெண்ணாகவே இருப்பேன். வீட்டுக்குள் பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட வேலையையும் செய்வேன். "காதல் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்கமுடியாது. என் காதல் பாதியிலேயே முறிந்து போய்விட்டது. இப்போது என் வாழ்வில் எனக்கென்று யாருமின்றி நான் தனியாக உள்ளேன். "படப்பிடிப்பின்போது நிறைய அசிங்கப்பட்டுள் ளேன். அப்போதெல்லாம் நான் ரொம்ப வருத்தப்பட்டுள்ளேன். ஆனால், இப் போது அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அதனால் தான் நான் வெறிபிடித்த மாதிரி வாய்ப்பைத் தேட ஆரம்பித்தேன். 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' நல்ல படமாக அமைந்தது. "நான் பைக்கில் போகும் போதே ஒரு சிலர் வந்து கலாட்டா செய்திருக்கி றார்கள். ஒரு முறை காதுக்குள் ஒரு பையன் ஊதிவிட்டுப் போய்விட்டான். பொது இடத்தில் அவனுக்கு நான் கொடுத்த உதை யில் பைக்குடன் போய் விழுந்திட்டான். "விஜய் சேதுபதி உயி ரோட்டத்துடன் நடிப்பது பிடிக்கும். தனுஷ் கண்ணி லேயே நடிப்பைக் காட்டுவார். அஜித், விஜய் என நிறைய பேர் உள்ளனர்," என்கிறார் பிரியங்கா (படம்).
பிரியங்கா: மச்சான் என்று அழைக்கும் ஆண் நண்பர்கள்
3 mins read
பிரியங்கா -

