நயன்தாரா நடித்துள்ள 'கொலை யுதிர் காலம்' படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பேசி னார் ராதாரவி. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். "சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்துகொண்டு என்ன பேசுகி றோம் என்று தெரியாமலேயே பேசி னர்," என்று பதிவிட்டிருந்தார். 'கைவிடப்பட்ட படம்' என்ற விக்னேஷ் சிவனின் பதிவால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, கோடை விடு முறையில் இப்படத்தை வெளி யிடலாம் என்று படக்குழு தற்போது வியாபாரப் பேச்சையும் தொடங்கி யுள்ளது. இந்நிலையில் இயக்குநர் விக் னேஷ் சிவனின் டுவிட்டர் கருத்து களை முன்வைத்து, இதற்கு முன் படத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்த பலரும் தற்போது வேண்டாம் என்று விலகி விட்டார் கள். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க முடிவெடுத்தது. தற் போது அந்நிறுவனமும் விலகிக் கொண்டது. விக்னேஷ் சிவனின் கருத்து களால் படத்தின் முழு வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கோர சக்ரி டோலட்டி முடிவு செய் துள்ளார். இப்படத்தின் தொடக்கத்தில் யுவன் தயாரிப்பாளராக இருந்தார். தற்போது மதியழகன் தயாரித்து வருகிறார். எனவே தயாரிப்பு, இசையமைப் பாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து யுவன் விலகியுள்ளார் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப் படுகிறது.
விக்னேஷ் சிவனால் நயன் படத்திற்கு சிக்கல்
2 mins read
-

