சுடச் சுடச் செய்திகள்

‘என் கதாபாத்திரம் பேசப்படும்’

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓவியா இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று கூறு கிறார்.
‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய வரிசையில் இந்தப் படமும் நகைச்சுவை கலந்த திகில் படமாக தயாராகி இருக்கிறது.
வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய இரண்டு கதாநாயகிகளுடன் மூன்றாவதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள் ளார்.
ஓவியாவிற்கு ‘90 எம்எல்’  படம் சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. இப்படத்தில் ஓவியா ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை விமர்சனங்கள் எழுந்தன.
எனவே ‘காஞ்சனா 3’ படம் தான் தனக்கு ஏற்பட்ட சறுக்கலைச் சரி செய்யும் என்று நம்பி அதன் வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு எந்தப் பிரச்சினை இருந்தாலும் என் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எனக்குப் பக்கபலமாக இருந்துள்ளார்கள்.
“என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’, ‘களவாணி 2’ படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும். ரசிகர்களால் பேசப்படும்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon