ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், புகைப்படம் எடுத்துக்கொண் டிருந்தபோது தனது கையால் நடிகை ஒருவரின் பின்புறத்தில் தட்டியதாகக் கூறப்படும் ஒரு புது சர்ச்சையில் இப்போது சிக்கி யுள்ளார். இதற்கு இந்தி இளம் நடிகை ஊர்வசி ரவ்தெலா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். "சமூக வலைத்தளங்களில் நானும் போனிகபூரும் இருக்கும் காணொளியை வைத்துக் கேலி செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் 'ஜென்டில் மேன்'. சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவுசெய்து நிறுத்துங் கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என் மனதை காயப்படுத்தாதீர்கள்," என்று கூறியுள்ளார். பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தட்டியபோது அசௌ கரியமாக உணர்ந்தது போல் தோன்றிய ஊர்வசி, இப்போது படவாய்ப்புகளைப் பெறுவதற்காக அவர் போனிகபூருக்கு ஆதரவாகப் பேசுவதாக சமூக வலைத்தளங் களில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ஊர்வசி ரவ்தெலா, மற்றும் பல நடிகர்களுடன் மும்பையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போனிகபூர், புகைப் படம் எடுக்கும்போது ஊர்வசி ரவ்தெலாவின் பின்பகுதியில் தன் கையால் தட்டினார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங் களில் வேகமாகப் பரவியது. அந்த காணொளியைப் பார்த்த வர்கள் மகள் வயதில் உள்ள பெண்ணை இப்படிச் செய்யலாமா என்று போனிகபூரை விளாசினர். திடீரென்று இப்படி பின்புறம் தட்டியதும் ஊர்வசி ரவ்தெலாவின் முகம் மாறிவிட்டது. இப்படி கேவல மாக போனிகபூர் நடந்து கொண் டது கண்டிக்கத்தக்கது என்று சிலர் பதிவிட்டனர். "திரையுலகில் மூத்தவரான போனி கபூர் இப்படி முறைதவறும் வகையில் நடந்துகொள்ளலாமா? சினிமாத் துறையில் இதெல்லாம் சகஜம்தானா? என்றெல்லாம் சிலர் கேள்விகளைக் கேட்டிருந்தனர்.
ஊர்வசி: போனிகபூர் அப்படி எதுவும் செய்யவில்லை
2 mins read
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளரு மான போனிகபூர், இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா. -

