‘தொழில்நுட்பத்தை கத்தியைப் போல் பயன்படுத்தணும்’

ஜீவா நடித்த ‘கீ’, ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடை யில் ஜீவாவுடன் பேசியபோது, நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கல்லூரி மாணவராக நடிக்கிறீர்களே? என்று கேட்டதற்கு, ஐந்தாண்டுகளுக்கு முன் ‘நண்பன்’ படத்தில் கல்லூரி மாணவராக நடித்தது எளிதாக இருந் தது. தற்போது தொழில்நுட்பம் அதிகம் வந்தபின் கல்லூரி மாணவராக நடிப்பது கடினமாகிவிட்டது. இப்போதுள்ள மாணவர்களுக்கு அனைத்தும் தெரிந்துள்ளது என்றார் ஜீவா.
எனது ‘டுவிட்டர்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’ பக்கத் தைச் சிலர் முடக்கியுள்ளனர். பல மாதங்களாக பயன்படுத்தாமல் விட்டதால் அவ்வாறு நடந் துள்ளது. கத்தியை எப்படி பத்திரமாக பயன் படுத்துகிறோமோ, அப்படித்தான் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவேண்டும். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கைத்தொலை பேசியால் பல பயங்கர சம்பவங்கள் நடந்து விட்டன. 
‘இரும்புத்திரை’ படமும் ‘கீ’ படமும் வெவ்வேறு படங்கள். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போது, அதேமாதிரி கதையை யாரும் எடுக்க மாட்டார்கள். இந்தப் படத்தின் கதையை துவக்கத்தில் பலரிடம் எடுத்துச் சென்றார் இயக்குநர். கதையைக் கேட்டவர்கள், இப்படியெல்லாம் நடக்குமா என்றனர். ஆனால், இப்போது நிஜத்திலேயே நடந்து கொண்டிருக்கிறது.
நடிகராக ஒரு படத்தை முடிக்க மூன்று மாதம் காத்திருக்கவேண்டியுள்ளது. மற்ற துணை நடிகர்கள் தேதியைப் பிரித்துத்தான் தருகின்றனர். படத்தின் நாயகனாக இருப் பதைவிட துணைபாத்திரமாக நடித்துவிட் டுப்போவது சுலபமாகத்தான் இருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானால் அந்தப் படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்திற்கு செல்லவேண்டும். அதுதான் என் விருப்பம் என்று கூறியுள்ளார் ஜீவா.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon