சுடச் சுடச் செய்திகள்

பெண் வேடத்தில் யோகிபாபு

கதைக் கருவுடன் ஒன்றி நடித்து வரும் முன்னணி நடிகர்களுடன் படத்துக்கு கலகலப்பூட்டும் சிரிப்பு நடிகர்களும்   பெண் வேடங்களில் நடித்து ‘பலே... பலே’ என்ற பாராட்டுகளைப் பெற முனைப்பு காட்டி வருகின்றனர். 
ஏற்கெனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத் குமார், சிவகார்த்திகேயன், விக் ரம், விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அசத்திக் கொண்டிருக்கும் நிலையில், சிரிப்பு நடிகர்கள் வரிசையில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்களை அடுத்து யோகி பாபுவும் பெண் வேடத்தில் நடிக்கத் துணிந்துள்ளார். 
‘ஜாம்பி’ என்ற படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங் களில் வேகமாகப் பரவி வருகிறது.
வடிவேலு, சந்தானத்துக்குப் பிறகு முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு தற்போது 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். நயன்தாராவுடன் நடித்த ஐரா அண்மையில் திரைக்கு வந்தது. குப்பத்து ராஜா, வாட்ச்மேன், கொரில்லா படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. 
எமன் வேடத்தில் கதாநாயக னாக நடித்துள்ள ‘தர்ம பிரபு’ படம் மே மாதத்தில் வெளிவர  உள்ளது. 
யோகிபாபுவும் யா‌ஷிகா ஆனந்தும் இணைந்து ‘ஜாம்பி’ படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை புவன் நல்லான். ஆர் இயக்கி உள்ளார். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவை படமாகத் தயாராகி உள்ளது.
பெரும்பகுதி படப்பிடிப்பு விடுதியைச் சுற்றியே நடந்துள்ளது. இந்தப் படத்தில் யோகிபாபு பெண் வேடத்தில் சில காட்சிகளில் வருகிறார். அந்தப் புகைப்படத்தை யா‌ஷிகா ஆனந்த் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon