'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் பிரபல மாடல் அழகி மீரா மிதுன். "என் தந்தைக்கு நான் தேசிய விருது வாங்கவேண்டும் என்பது ஆசை. அவரது ஆசையை ஒரு நாள் நிறை வேற்றுவேன். விருது வாங்கும் வாய்ப்புள்ள படம் என்றால் சம்பளம் வாங்காமல் நடிப் பதற்குத் தயார்," என்கிறார். "போதை ஏறி புத்தி மாறி' படத்தில் நான் அர்த்தமுள்ள பாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தின் பெயரைக் கேட்டவுடன் குடி குடியைக் கெடுக்கும் என்று அறிவுரை கூறப் போகும் படம் என்று நினைத்தால் அது தவறு. நாற்காலியின் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தும் திகிலூட்டும் படம் இது. "இன்னும் மூன்று படங்களின் பேச்சுவார்த்தையில் இருக்கிறேன். கதைக்காக மொட்டை போடச்சொன்னால் கூட போடு வேன். நான் தேசிய விருது வாங்கவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அவர் இப்போது இல்லை. ஆனால் அந்தக் கனவை நனவாக்குவேன். அப்படியொரு கதை கிடைக் கும் பட்சத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன். "அதேநேரத்தில் கவர்ச்சியாகவும் நடிப் பேன். மாடலிங் உலகில் இருந்து வந்ததால் கவர்ச்சியின் எல்லை தெரியும். கதையின் முக்கியத்துவத்தை பொறுத்து தேவைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பேன்," என்கிறார் மீரா மிதுன்.
'விருது படத்தில் சம்பளமின்றி நடிப்பேன்'
1 mins read
-

