'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களையடுத்து 'சிந்துபாத்'திற்காக மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்த் துள்ளார் அருண்குமார். இதில் கதாநாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி.
படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டன. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.ஒருசிலர் இது ரொம்ப சீரியஸான படமா என்று கேட்கி றார்களாம். அப்படியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்கிறார் இயக்குநர்.
"அடுத்த முன்னோட்ட காட்சி களும் தயாராகிவிட்டன. அதையும் பார்த்தால் ரசிகர்கள் வேறுவித மான கருத்துகளைச் சொல்வார் கள். உண்மையில் இது அதிரடியும் திகிலும் நிறைந்த கதை. ஆனால் முன்னோட்ட காட்சிகளைப் பார்த் தால் வேறுவிதமாக நினைக்கத் தோன்றும். "இந்தக் குழப்பமும் திருப்பமும் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும் எனக் கருதுகிறேன்," என்கிறார் இயக்குநர் அருண் குமார். மொத்த படமும் ஓர் அழகான இசைப்பயணமாக... கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக் குமாம். மிக விரைவில் இசையமைப்பாளர் யுவன் சங்கருடன் துபாய் சென்று இசைப் பணிகளைக் கவனிக்கப் போகிறாராம்.
'சேதுபதி'க்குப் பிறகு இடை வெளி ஏன்?
"சில சூழல்கள் அப்படி அமைந்துவிட்டன. 'சேதுபதி' படத்தை முடித்ததும் அடுத்து வேறு சில நாயகர்களுக்காக கதை தயார் செய்துகொண்டிருந்தேன். எல்லாருக்குமே கதை பிடித்திருந் தது. ஆனால் உடனே கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே கொஞ்சம் காத்திருந்தேன்."அப்போது யதேச்சையாக விஜய்சேதுபதி சாரை சந்திக்க நேர்ந்தது. 'என்ன செய்கிறாய்?' என விசாரித்தார். 'அடுத்தும் நாமே ஒரு படத்தை எடுக்க லாமே?' என்று கேட்டபோது உற்சாகமாகிவிட்டேன்.
"எனினும் அவருக்கும் அடுத் தடுத்த சில படங்கள் காத்தி ருந்தன. எனவே இந்தப் படத்தை உடனடியாகத் தொடங்க முடிய வில்லை," என்கிறார் அருண்குமார்.
'சிந்துபாத்'தின் முக்கியமான காட்சிகளைத் தாய்லாந்தில் பட மாக்கி உள்ளனர். படக்குழுவுக்கு விசா பெறுவதிலும் தாமதம் ஏற்பட் டதாம். இப்படி பல விஷயங்களால் படப்பிடிப்பு தாமதமாகவே துவங்கி உள்ளது."வடமாநிலத்தில் நடக்கிற மாதிரிதான் கதை அமைத்தேன். ஆனால், முழுக்கதையையும் கேட்ட தயாரிப்பாளர்தான், 'தாய் லாந்து போகலாம், கதை இன்னும் வலுவாகும்' என்றார்.
யார் இந்த சிந்துபாத்? சிந்துபாத் என்பது கற்பனைக் கதாபாத்திரம்தான். கடல்தாண்டி வாணிபம் செய்வதற்குப் போன சிந்துபாத்துக்கு நிறைய பிரச் சினைகள், சவால்கள். தன்னோட வீரதீர சாகசத்தால் அதையெல்லாம் எதிர்கொண்டு முறியடிப்பார். இதுதான் நாம் படித்த சிந்துபாத் கதையோட சாராம்சம்.
"இப்படத்தில் விஜய்சேதுபதி தான் சிந்துபாத். இதில் அவர் உள்ளூர் திருடன். கடல் தாண்டிப் போய் பிரச்சினைகளை முறியடித்து வெற்றியுடன் திரும்புவதால் இந்தத் தலைப்பை வைத்தோம்," என்கிறார் அருண்குமார்.

