பிடித்தமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் வாயிலாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அதுல்யா ரவி. அதன் பிறகு ‘ஏமாளி’ என்ற படத்தில் நடித்திருந்தார். கூடிய விரைவில் ‘நாடோடிகள் 2’ வெளியாக இருக்கிறது. 
தற்போது அதுல்யா ரவியின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும் பல வாய்ப்புகள் தேடிவந்தாலும் அனைத் தையும் ஏற்காமல், தமக்குப் பிடித்தமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக் கிறார். 
அந்த வகையில் அவர் அடுத்து பெரிதும் எதிர்பார்க் கும் படம் ‘நாடோடிகள்-2.’ 
“இந்தப் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். மிகவும் அற் புதமான கதை. அதே போல் மிக நட்பான, பாசமான படக்குழு அமைந்தது என் அதிர்ஷ்டம். 
“இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நல்ல தோழி கிடைத்துள்ளார்,” என் கிறார் அதுல்யா ரவி. 
அவர் குறிப்பிடும் அந்த தோழி இதே படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள அஞ்சலி. இருவரும் படப் பிடிப்பின்போது கேரவ னுக்குள் புகுந்து கொண்டு ஓய்வெடுக் காமல் படப்பிடிப்பு நடந்த பகுதிகளைச் சுற்றி வந்துள்ளனர். 
அப்போது மனம் விட்டு பல விஷயங் கள் குறித்தும் பேசிக் கொண்டனராம். 
இதனால் ஏற்பட்ட நெருக்கம் இருவரை யும் கூட்டாளிகளாக மாற்றி உள்ளது. 
இதையடுத்து அஞ்சலியுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து அதுல்யா வெளியிட்டு வருகிறார். 
“இருவருமே படப்பிடிப்பில்தான் முதன்முத லாகச் சந்தித்துக் கொண்டோம். ஒரு கோப்பை தேநீரைக் குடித்து முடிப்பதற்குள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டுவிட்டது. 
“மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இருவரும் அங்கு சுற்றித் திரியாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று வந்தோம். 
“இருவருக்குமே மதுரை மிகவும் பிடித்த ஊராகிவிட்டது. எனது மனதுக்கு நெருக்கமான தோழிகளின் பட்டியலில் இனி அஞ்சலிக்குத்தான் முதலிடம்,” என்கிறார் அதுல்யா ரவி. 
‘நாடோடிகள்-2’ படத்தில் தமது கதாபாத் திரத்தின் தன்மை குறித்து எந்த விவரத்தையும் வெளியிட மாட்டாராம். இயக்குநர் வாய் திறக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.
“என்னைப் பொறுத்தவரை நான் ஏற்றிருப்பது மிக முக்கியமான கதாபாத்திரம். கதை கேட்ட போதே இந்தக் கதாபாத்திரம் நமக்கு நூறு விழுக் காடு கச்சிதமாகப் பொருந்தும் என்று முடிவு செய்துவிட்டேன். 
“படத்தில் நடித்தபோது எனது கணிப்பு மிகத் துல்லியமாக இருந்ததை உணரமுடிந்தது. படம் பார்த்தபிறகு எனது நடிப்பு குறித்து ரசிகர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவேன்.”
உங்களுக்கும் அஞ்சலிக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்று கேட் டால், பதறிக்கொண்டு பதிலளிக்கிறார் அதுல்யா. 
“ஏன் இப்படியெல்லாம் கேட்டு சண்டை மூட்டி விடப் பார்க்கிறீர்கள். எனக்கான கதாபாத்திரம் குறித்து மட்டுமே நான் கருத்து தெரிவிக்க இய லும். அஞ்சலியும் நானும் இனி பிரிக்கமுடியாத தோழிகள். அஞ்சலி மிகச்சிறந்த தோழி. ரொம்பக் கஷ்டப்பட்டு எங்களைப் பிரிக்கப் பார்க்காதீர்கள். தோல்வியே மிஞ்சும்,” என்று சிரிக்கிறார் அதுல்யா.
நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால்  சம்பளத் தைக் குறைத்துக்கொள்ளும் முடிவில் இருந்தாராம் அதுல்யா ரவி. ஆனால் இத்தகைய சமரசங்கள் ஏதும் தேவையில்லை என அஞ்சலி அறிவுரை கூறியுள்ளார். 
இதையடுத்து தன் முடிவை மாற்றிக்கொண்ட தாகச் சொல்கிறார் அதுல்யா ரவி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon