ஜி.வி. பிரகாசுக்கு நன்றி தெரிவித்த 'குப்பத்து ராஜா' இயக்குநர்

ஜி.வி. பிரகாசுக்கு நன்றி தெரிவித்த 'குப்பத்து ராஜா' இயக்குநர்

1 mins read
41b0804d-e2c0-417c-acb3-6fd1be2a89e6
-

இயக்குநராக வேண்டும் என்ற தமது கனவை நிறைவேற்றி வைத்துள்ள ஜி.வி. பிரகாசுக்கு என்றென்றும் தாம் கடமைப்பட்டிருப்பதாக நெகிழ்கிறார் 'பாபா' பாஸ்கர். இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள 'குப்பத்து ராஜா'வில் ஜி.வி. பிரகாஷ்தான் நாயகன். பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். பாபா பாஸ்கர் நடனக் கலைஞநராக இருந்து பின்னர் நடன இயக்குநராக வளர்ந்தவர். இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். "படம் குறித்து எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் தருகின்றன. இந்த நாளுக்காகவே இவ்வளவு ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். "நடன இயக்குநராக என் பயணத்தைத் துவக்கி வைத்தவர் தனுஷ். அதேபோல் இயக்குநராகும் கனவை நனவாக்கியவர் ஜி.வி. கதை மீது நம்பிக்கை வைத்து எனது இயக்கத்தில் நடித்தார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அப்படி எனக்குக் கிடைத்த தயாரிப்பாளர்களே எனக்கான வரம் என்பேன். பல கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள படம் இது," என்கிறார் இயக்குநர்.